'கோல்ட்ரிப்' இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு தமிழக அரசு 'நோட்டீஸ்'
'கோல்ட்ரிப்' இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு தமிழக அரசு 'நோட்டீஸ்'
ADDED : அக் 08, 2025 04:00 AM

சென்னை:காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து உட்கொண்டு, மத்திய பிரதேசத்தில், 14 குழந்தைகள் இறந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, 'ஸ்ரீசன் பார்மா' நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு தமிழக அரசு சார்பில், 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது.
சந்தேகம் மத்திய பிரதே மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தில், 1 முதல் 7 வயது வரை உள்ள 14 குழந்தைகள், அடுத்தடுத்து சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தன. திடீரென ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு, உயிரிழப்புக்கு காரணம் என்பது தெரியவந்தது.
இதற்கா ன காரணம் குறித்து, அம்மாநில அரசு விசாரித்த போது, காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் செயல்படும், 'ஸ்ரீசன் பார்மா' என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட, 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து, மற்றொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட 'நெக்ஸ்ட்ரோ டி.எஸ்.' மருந்துகள் காரணம் என்பது தெரியவந்தது.
இறந்த குழந்தைகளின் சிறுநீர க திசுவில், 'டை எத்திலீன் கிளை சால்' என்ற ரசாயன வேதிப்பொருள் இருந்தது தெரியவந்தது. 'பெயின்ட், மை' போன்ற பொருட்களை தயாரிக்க பயன்படுத்தப்படும், ரசாயனம், சம்பந்தப்பட்ட இருமல் மருந்து களி ல் கலந்திருந்தது.
இதையடுத்து, மத்திய பிரதேச அரசு, அம்மருந்து நிறுவனத்தை சோதனை செய்து, நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது.
உடனடியாக, 'காஞ்சிபுரத்தில் செயல்படும் 'ஸ்ரீசன் பார்மா' நிறுவனத்தில், அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கோல்ட்ரிப் உட்பட ஐந்து மருந்துகளை ஆய்வுக்காக எடுத்து சென்றனர். ஆய்வு முடிவில், 'கோல்ட்ரிப்' மருந்தில், 'டை எத்திலீன் கிளைசால்' ரசாயனம் இருந்தது கண்டறியப்பட்டது.
அதனால், மறு உத்தரவு வரும் வரை, தமிழகம் முழுதும், அம்மருந்தின் விற்பனையையும், வினியோகத்தையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. அதேபோல், இம்மருந்து வினியோகிக்கப்படும் ஒடிஷா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு, கோல்ட்ரிப் மருந்து பயன்பாட்டை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மருந்து உற்பத்தி உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என, விளக்கம் கேட்டு அந்நிறுவனத்திற்கு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை காஞ்சிபுரம் மண்டல மருந்து கட்டுப்பாடு துறை அதிகாரி மணிமேகலை தலைமையில், அந்நிறுவனத்தின் முன், நேற்று நோட்டீ ஸ் ஒட்டப்பட்டது.
இதுகுறித்து மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறியதாவது:
'கோல்ட்ரிப்' மருந்து சாப்பிட்டு, ராஜஸ்தான் மாநிலத்திலும், இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. இறப்புக்கு இருமல் மருந்து காரணமல்ல என, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
எனினும், மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். நிறுவனம் அளிக்கும் விள க்கத்தை தொடர்ந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.*