ADDED : ஜூலை 23, 2025 03:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, ஈசல்திட்டு மலை கிராமத்தில், சாலை வசதி இல்லாததால், இறந்து போன மணியன் என்பவர் உடலை, கரடுமுரடான மலைப்பகுதியில், தொட்டில் கட்டி துாக்கிச் செல்லும் வீடியோ, அதிர்ச்சி அளிக்கிறது.
உடுமலைப்பேட்டைபகுதியில், அமைந்துள்ள மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு, அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், போராடியும், இரு ஆண்டுகளுக்கு முன், 59 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் சாலை அமைக்கவில்லை என்பது, தமிழக அரசின் அவலநிலைக்கு சான்று.
--அண்ணாமலை, முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,