பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
ADDED : டிச 18, 2024 06:30 PM

சென்னை: பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித்திட்டத்தில் உதவித் தொகையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பத்திரிகையாளர் நலன் கருதி, பத்திரிகைகளில் தொடர்ந்து பணியாற்றிய ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் பிழை திருத்துபவர்கள் ஆகியோர் பணியிலிருக்கும் போது உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் குடும்ப நிதியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, பத்திரிகையாளர், 20 ஆண்டு பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது உயிரிழந்தால், அவரது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், 15 ஆண்டு பணிபுரிந்திருந்தால், ரூ.7,50,000, 10 ஆண்டு பணிபுரிந்திருந்தால், ரூ.5 லட்சமும் 5 ஆண்டு பணிபுரிந்திருந்தால் ரூ.2.50,000 குடும்ப உதவிநிதி வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.