ADDED : மே 30, 2025 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில் 11 நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, ஆண்டு வருமானம் 15 கோடி ரூபாய்க்கு மேல் இருந்தால், சிறப்பு நிலை; 9 கோடியில் இருந்து 15 கோடி ரூபாய் வரை தேர்வு நிலை; 6 கோடி முதல் 9 கோடி ரூபாய் வரை முதல் நிலை; 6 கோடி ரூபாய்க்கு மிகாமல் இருந்தால் இரண்டாம் நிலை என, நகராட்சிகள் தரம் பிரிக்கப்பட்டுள்ளன.
வருவாய் உயர்ந்தால், தரம் உயர்த்தப்படுகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு 11 நகராட்சிகளை தரம் உயர்த்தி, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கார்த்திகேயன் அரசாணை வெளியிட்டுள்ளார்.