நுாற்பாலையை நவீனமாக்க கடன் தமிழக அரசு 6 சதவிகிதம் வட்டி மானியம் வழங்கும்
நுாற்பாலையை நவீனமாக்க கடன் தமிழக அரசு 6 சதவிகிதம் வட்டி மானியம் வழங்கும்
ADDED : டிச 14, 2024 10:37 PM

சென்னை:தமிழகத்தில் உள்ள நுாற்பாலைகளை நவீனமயமாக்கும் வகையில், பழைய இயந்திரங்களை மாற்றி புதிய இயந்திரங்களை நிறுவுவதற்காக பெறப்படும் கடனுக்கு, 6 சதவீத வட்டி மானியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் நுாற்பு ஆலைகளின் எண்ணிக்கையில் தமிழகம் முன்னணியில் இருந்தாலும், பழைய இயந்திரங்களை பயன்படுத் துவதால், நாட்டின் மற்ற பகுதிகளை விட, தமிழகத் தில் நுால் உற்பத்தி திறன் குறைவாக உள்ளது.
தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக, நெசவு மற்றும் பின்னல் போன்ற அடுத்தடுத்த நிலை தொழில்களில், தரமான நுாலுக்கான தேவை அதிகரித்துள்ள தால் இயந்திரங்களை நவீனமயமாக்க வேண்டியுள்ளது.
இதையடுத்து, இதற்காக பெறப்படும் கடனுக்கு, 6 சதவீதம் வட்டி மானியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு, அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்காக, நடப்பு நிதியாண்டிற்கு, 50 கோடி ரூபாய் உட்பட, 10 ஆண்டுகளுக்கு, 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 2,032 நுாற்பாலைகள் உள்ளன
மானியத்துக்காக அரசு ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளது