குற்றவாளிகளின் சொர்க்க பூமியாக மாறிய தமிழகம்; இ.பி.எஸ்., பாய்ச்சல்
குற்றவாளிகளின் சொர்க்க பூமியாக மாறிய தமிழகம்; இ.பி.எஸ்., பாய்ச்சல்
ADDED : நவ 29, 2024 11:46 AM

சென்னை: 'தமிழகத்தை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு மாற்றி உள்ளது' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர்- சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி மற்றும் மகன் என ஒரே குடும்பத்தில் மூவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தி.மு.க., ஆட்சியில் குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை. இந்த ஆட்சியில் நடக்கும் தொடர் குற்றங்கள், இவற்றை தடுக்க இங்கு ஒரு ஆட்சி இருக்கிறதா? இல்லையா?' என்ற அச்சமிகு கேள்வியை மக்களிடத்தில் எழுப்புகின்றன.
தமிழகத்தை குற்றவாளிகளின் சொர்க்க பூமியாக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு மாற்றி உள்ளது. இதற்கு எனது கடும் கண்டனம். இக்கொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், சட்டம் ஒழுங்கைக் காக்க இனியாவது செயல்படுமாறு தி.மு.க., முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.