ADDED : ஜூலை 22, 2025 07:25 AM
தமிழகத்தில், 24 மணி நேரத்தில் மட்டும், 10 படுகொலைகள் நடந்திருப்பது, மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளன. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆசிரியர் குத்திக்கொலை, நகைக்காக மூதாட்டி கொலை, மது போதையில் இளைஞர் கொடூர கொலை என பட்டியல் நீள்கிறது. கொலையானவர்களில் பாதி பேர் பெண்கள் என்பதும், மீதி கொலைகளின் பின்னணியில் போதை இருப்பதும், தி.மு.க.,வின் அலங்கோல ஆட்சிக்கான அவல சான்றுகள்.
பழுதடைந்த அரசு இயந்திரங்களால், குற்ற வாளிகளுக்கு குளிர்விட்டு போய்விட்டது. அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.
அமைதி பூங்காவாக திகழ்ந்த தமிழகத்தை, இன்று ஆயுதங்களின் கிடங்காகவும், கொலைகளின் கூடாரமாகவும் மாற்றிய தி.மு.க.,வை, ஆட்சி கட்டிலில் இருந்து அகற்றியே ஆக வேண்டும்.
சட்டம் - ஒழுங்கை சீரழிப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்படும் தி.மு.க., ஆட்சி இருக்கும் வரை, தமிழகத்திற்கும் விடிவு காலம் இல்லை.
- நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,