3,000 ரூபாய் பாஸ்டேக் சந்தா முன்னிலை வகிக்கும் தமிழகம்
3,000 ரூபாய் பாஸ்டேக் சந்தா முன்னிலை வகிக்கும் தமிழகம்
ADDED : ஆக 20, 2025 03:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: அறிமுகமான நான்கு நாட்களில், ஆண்டு பாஸ்டேக் சந்தா திட்டத்தில் இணைவோர் எண்ணிக்கையில், தமிழகம் முன்னிலையில் உள்ளது.
நாடு முழுதும் 3,000 ரூபாய் செலுத்தி பெறும் ஆண்டு பாஸ்டேக் சந்தா திட்டம், கடந்த 15ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தில் இணைவோர், ஓராண்டு வரை அல்லது 200 முறை, இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை டோல்கேட்களை கடந்து செல்ல பயன்படுத்த முடியும். இத்திட்டத்தில், கடந்த நான்கு நாட்களில், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.
இதில், அதிகபட்சமாக 1.50 லட்சம் சந்தாதாரர்களுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஒரு லட்சம் சந்தாதாரர்களுடன் கர்நாடகா இரண்டாவது இடத்திலும், ஹரியானா மூன்றாவது இடத்திலும் உள்ளன.