sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 கூடங்குளம் மின்சார விலையை குறைக்கக்கோரி தமிழகம் கடிதம்

/

 கூடங்குளம் மின்சார விலையை குறைக்கக்கோரி தமிழகம் கடிதம்

 கூடங்குளம் மின்சார விலையை குறைக்கக்கோரி தமிழகம் கடிதம்

 கூடங்குளம் மின்சார விலையை குறைக்கக்கோரி தமிழகம் கடிதம்


ADDED : மார் 08, 2026 02:07 AM

Google News

ADDED : மார் 08, 2026 02:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: குஜராத்திற்கு குறைந்த விலையில் அணு மின் சாரம் வழங்கப்படுவதை சுட்டிக்காட்டி, கூடங் குளம் அணு மின் நிலைய விரிவாக்க அணு உலைகளில் இருந்து, தமிழகத்திற்கு வழங்க உள்ள மின்சார விலையை குறைக்க, மத்திய மின் துறைக்கு, தமிழக மின் வாரியம் கடிதம் எழுதியுள்ளது.

வலியுறுத்தல் திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அணு மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 1,000 மெகா வாட் திறனில், இரு அலகுகளில் மின் உற்பத்தி செய்யப் படுகிறது.

அதிலிருந்து, தமிழகத்திற்கு தினமும், 1,152 மெகா வாட்டும், மீதி மின்சாரம் பிற மாநிலங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு யூனிட் விலை சராசரியாக, 5.40 ரூபாயாக உள்ளது.

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் தலா, 1,000 மெகா வாட் திறனில் மூன்றாவது, நான்காவது அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த மின்சாரத்தை தமிழகத்திற்கு யூனிட், 5.91 ரூபாய் விலைக்கு வழங்க இருப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பேட்டரியில் சேமிக்கப்படும் புதுப்பிக்கத்தக்க மின்சாரமே யூனிட், 4 ரூபாய்க்கு கிடைக்கிறது.

குஜராத்தின் காக்ராபர் அணு மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, அம்மாநிலத்திற்கு யூனிட், 5.60 ரூபாய்க்கு வழங்குவதாக, மத் திய அரசு தெரிவித்தது. அதை குறைக்க, அம்மாநில அரசு வலியுறுத்தியது.

கடிதம் இதையடுத்து யூனிட், 4.50 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

அதேபோல், கூடங் குளம் மூன்றாவது, நான்காவது அணு உலை மின்சாரத்தை குறைந்த விலையில், தமிழகத்திற்கு வழங்க வலியுறுத்தி, மத்திய மின் துறையின் தென் மாநில மின்சார குழுவுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us