தமிழக அரசியல் பணக்காரர்கள் கையில் சென்றுவிட்டது பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி
தமிழக அரசியல் பணக்காரர்கள் கையில் சென்றுவிட்டது பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி
ADDED : பிப் 02, 2025 04:24 AM
கடலுார் : தமிழக அரசியல் தற்போது பணக்காரர்கள் கையில் சென்றுவிட்டது என, முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
கடலுாரில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
அரசியல் தற்போது பணக்காரர்கள் கையில் சென்றுவிட்டது. இந்தியாவில் அதானி, அம்பானி உள்ளிட்ட சில, குடும்பங்கள் தான் நன்றாக உள்ளன. ஒரு குடும்பம் வாழ 9 குடும்பங்கள் கஷ்டப்படுகிறது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்து என்ன பயன். தினந்தோறும் ராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்படுகின்றனர்.
பா.ஜ.,வில் அண்ணாமலைக்கே வேலையில்லாமல் போயிற்று. அந்த வேலையை கவர்னர் பார்த்து வருகிறார். எல்லோருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும். பணக்காரர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏழையாக இருந்தாலும் திறமை இருந்தால் அவர்களுக்கும் கிடைக்க வேண்டும். அரசாங்கம் எல்லாருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்.
பரந்துார் விமான நிலையம் வேணும். அந்த நிலத்தை எடுத்துவிட்டால் அந்த மக்கள் எங்கு செல்வார்கள். அவர்களுக்கு சரியான மாற்று ஏற்பாடு செய்துவிட்டு நிலத்தை எடு.
நிலத்தை கொஞ்சம் கொஞ்சமாக மற்ற திட்டத்திற்கு கொடுத்துவிட்டால் உணவு சாப்பிடுவது எப்படி. எனவே இப்படிப்பட்ட நிலையை வளர்ச்சி என்று சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.