ADDED : ஏப் 02, 2025 07:53 PM
தமிழகத்திற்கான ரயில் திட்டங்களுக்கு, 2025- - 26ம் நிதியாண்டில், 6,626 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட, 264 கோடி ரூபாய் அதிகம். இந்த நிதி ஒவ்வொரு திட்டங்களுக்கும் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது என்ற விபரம், பிங் புத்தகத்தில் தான் இருக்கும். அதை ரயில்வே வாரியம் இதுவரை வெளியிடவில்லை. இதனால், தமிழகத்தில் நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இனியும் தாமதிக்காமல், தமிழகத்தில் ஒவ்வொரு ரயில் திட்டத்திற்கும் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த விபரத்தை, ரயில்வே வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும். அது மட்டுமின்றி, கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியில், எவ்வளவு செலவிடப்பட்டது என்பது குறித்த விபரங்களையும் வெளியிட வேண்டும்.
-அன்புமணி, தலைவர், பா.ம.க.,

