ADDED : மார் 29, 2025 07:32 PM
மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ளும் வகையில், ஒரு கோடியே, 15 லட்சம் பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கக்கூடிய மகளிர் உரிமை திட்டம், தமிழகத்தில் மட்டுமே சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில், யாரும் விருப்பப்பட்ட எந்த மொழியையும் படிக்கலாம்; தடையில்லை. ஆனால், விருப்பம் இல்லாதவர்களிடம் ஹிந்தியை திணிக்கின்றனர்.
இங்கு, விருப்பப்பட்டவர்கள் எந்த மொழி வேண்டுமானாலும் படிக்கலாம். விருப்பம் இல்லாமல் ஹிந்தியை கொண்டு வருவதை எதிர்க்கிறோம்.
இந்தியாவில் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில், தமிழகத்துக்கு இரண்டாம் இடம். அதிலும், தொழில் நிறுவனங்களில் மகளிர் பெருமளவில் பணியாற்றி வருகின்றனர்.
இதனால் தான், இந்தியாவில் பெண்கள் அதிகம் பணியாற்றக்கூடிய மாநிலங்களில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
செந்தில் பாலாஜி, தமிழக அமைச்சர்