போதைப்பொருள் விற்பனையில் இந்தியாவில் தமிழகம் முதலிடம்: பழநியில் எச்.ராஜா குற்றச்சாட்டு
போதைப்பொருள் விற்பனையில் இந்தியாவில் தமிழகம் முதலிடம்: பழநியில் எச்.ராஜா குற்றச்சாட்டு
ADDED : ஏப் 20, 2025 11:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் அதிக அளவில் போதைப்பொருள் விற்பனையாகிறது. கஞ்சா மூடைகள் பிடிபடுகிறது. இந்த மோசமான ஆட்சி அடுத்த தலைமுறையை அழித்துக் கொண்டிருக்கிறது.
2026 சட்டசபை தேர்தலுக்காக பா.ஜ.. தலைவர்கள் மிக வலிமையான கூட்டணியை உருவாக்கியுள்ளனர். கருத்துக்கணிப்புகள் பா.ஜ., கூட்டணி வெல்லும் என தெரிவிக்கின்றன.
பழநி அருகே பாலசமுத்திரம் பேரூராட்சியில் 96 ஏக்கர் நிலத்தை வக்ப் போர்டுக்கு சொந்தமானது என கூறி வருகின்றனர். அங்கு இருப்பவர்களை வெளியேற்ற வி.சி.க., தி.மு.க., ஆகியோர் ஆதரிப்பார்களா. ஏழை மக்களை வஞ்சிக்கும் தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
- எச்.ராஜா
பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர்

