ADDED : ஏப் 30, 2025 06:15 AM

சென்னை: சட்டசபையில் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி பேசியது:
தமிழகத்தில், 2023- - 24ம் நிதியாண்டில், இதுவரை இல்லாத அளவாக, கொடி நாள் நிதி, 67.54 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. கொடி நாள் நிதி வசூலில், தொடர்ந்து, 16 ஆண்டுகளாக, தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
கொடி நாள் நிதியாக, எம்.எல்.ஏ.,க்கள் தாங்கள் விரும்பும் தொகையை, கலெக்டரிடம் வழங்க வேண்டும். அப்படி கொடுத்தால், முன்னாள் ராணுவத்தினருக்கு, இன்னும் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்த முடியும்.
புற்று நோயால் பாதிக்கப்பட்ட, முன்னாள் ராணுவத்தினருக்கு வழங்கப்படும், மாதாந்திர நிதியுதவி, 7,000 ரூபாயில் இருந்து, 10,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
கைம்பெண்கள் ஈமச்சடங்கிற்கு வழங்கப்படும் நிதியுதவி, 7,000 ரூபாயில் இருந்து, 10,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.