ADDED : ஜன 15, 2026 02:41 AM
மாநில உரிமைகளை, மத்திய அரசு தொடர்ந்து பறிக்கிறது. அதை நம் முதல்வர் ஸ்டாலின் தான் தட்டிக் கேட்கிறார்.
மாநில கவர்னருக்கு தான், பல்கலை துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் என்ற தனி உரிமை, ஆதிக்கத்தை முறியடித்துள்ளார் நம் முதல்வர்.
மாநில முதல்வரே, துணைவேந்தர்களை நியமித்துக் கொள்ளும் உரிமையை நீதிமன்றம் வாயிலாக பெற்றதன் வாயிலாக அதை நிறைவேற்றி உள்ளார்.
மாநிலத்தில் இருந்து அரசியல் செய்ய வேண்டிய கட்சிகள் அனைத்தும் டில்லிக்கு காவடி துாக்குகின்றன. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பா.ம.க.,வுடன் கூட்டணியை பேசி முடித்து விட்டார். ஆனால், அதை அறிவிப்பதற்கு முன், டில்லி தலைமையிடம் கேட்டு, பின் அறிவிக்கிறார்.
பா.ஜ.,வின் ஊதுகுழலாக இருப்போர் தமிழகத்தை ஆளக்கூடாது என மக்கள் முடிவெடுத்து விட்டனர். டில்லியின் சர்வாதிகாரத்தை, தமிழகம் ஒரு போதும் ஏற்காது.
- கோவி. செழியன், தமிழக அமைச்சர், தி.மு.க.,
