ADDED : ஏப் 04, 2025 10:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேகதாது அணை கட்ட, உடனே அனுமதி வழங்க வேண்டும் என, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலை நேரில் சந்தித்து, கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, துணை முதல்வர் சிவகுமார் வலியுறுத்தி உள்ளனர். மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது. காவிரி டெல்டா பாலைவனமாகிவிடும்.
இப்பிரச்னை குறித்து கேள்வி எழுப்பினால், தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல், எந்த கொம்பனாலும், மேகதாது அணையைக் கட்ட முடியாது எனக் கூறி, தி.மு.க., அரசு கடந்து சென்று விடுகிறது. அதுமட்டுமின்றி, கர்நாடக ஆட்சியாளர்களிடம் ஒட்டி உறவாடுகிறது. இவற்றை பார்க்கும் போது, மேகதாது அணை விவகாரத்தில், தமிழகம் அதன் உரிமையை இழந்து விடுமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
ராமதாஸ், நிறுவனர், பா.ம.க.,
***

