ADDED : ஆக 10, 2025 06:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆப்பரேஷன் சிந்துார் வாயிலாக பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதிகளுக்கும் பதிலடி கொடுத்து இருக்கிறோம்.
அதை கொண்டாடும் வகையில், வீடு தோறும் தேசியக்கொடி ஏந்தி பேரணியாக சென்று கொண்டிருக்கிறோம்.
முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் வளர்ச்சியை நான்காண்டுகளி ல் பின்னோக்கி எடுத்து சென்றிருக்கிறார்.
தமிழக மக்களின் நலனில் துளியும் அக்கறை காட்டவில்லை. அவருடைய நிர்வாகத் திறமையின்மையால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது.
காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்கப் போகிறவர்களுக்கும், புகாருக்கு உள்ளானவர்களுக்கும் பாதுகாப்பில்லை. போலீசாரே எமனாக உள்ளனர்.
தமிழகத்தில் லஞ்சத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பள்ளி, கல்லூரிகளிலும் போதை மற்றும் மது புழங்குகின்றன. இதனால், இளைய தலைமுறை சீரழிகிறது.
- முருகன், மத்திய இணையமைச்சர், பா.ஜ.,