ADDED : மார் 08, 2024 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில் வீடு உட்பட அனைத்து பிரிவுகளுக்கும், மின் வினியோகம் செய்யும் பணியை, மின் வாரியம் மட்டுமே மேற்கொள்கிறது. மாநிலத்தின் தினசரி மின் நுகர்வு சராசரியாக, 30 கோடி யூனிட்களாக உள்ளன. இது, கோடை காலத்தில் அதிகரிக்கிறது.
அதன்படி, 2023 ஏப்., 20ல் மின் நுகர்வு, 42.37 கோடி யூனிட்களாக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவாக உள்ளது.
தற்போது, வெயில் சுட்டெரிப்பதால் தினசரி மின் நுகர்வு, 35 கோடி யூனிட்களை தாண்டியது. இது, நேற்று முன்தினம், 40.20 கோடி யூனிட்களாக அதிகரித்தது. இந்தாண்டில் முதல் முறையாக மின் நுகர்வு, 40 கோடி யூனிட்களை தாண்டியுள்ளது.

