உள்ளடக்கத்திற்கு செல்ல
குழந்தைகளுக்கு தமிழில் பெயர் இணையதள பக்கம் துவக்கம்
குழந்தைகளுக்கு தமிழில் பெயர் இணையதள பக்கம் துவக்கம்
ADDED : மார் 14, 2026 03:13 AM
அ நிறம் | அளவு
சென்னை: குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுவதற்காக, தமிழ் இணைய கல்வி கழகம் துவக்கியுள்ள, தனி இணையப் பக்கத்தை, அமைச்சர் தியாகராஜன், நேற்று தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார்.
குழந்தைகளுக்கு அழகிய தமிழ்ப் பெயர்கள், அதற்கான பொருள் விளக்கங்கள் அடங்கிய இணையப் பக்கம், தமிழ் இணைய கல்வி கழகம் வாயிலாக துவக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, https://tamildigitallibrary.tn/tamilnames என்ற இணையப் பக்கம் துவக்கப்பட்டுள்ளது.
மேலும் https://tamilculturalatlas.in என்ற இணையதள பக்கம் துவக்கப்பட்டுள்ளது. இதில், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கோவில்கள், தொல்லியல் தளங்கள் போன்ற விபரங்கள், புகைப் படங்கள், வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
