பிள்ளையார்பட்டி கோவிலில் தமிழ் புத்தாண்டு கோலாகலம்
பிள்ளையார்பட்டி கோவிலில் தமிழ் புத்தாண்டு கோலாகலம்
ADDED : ஏப் 14, 2025 12:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டு கோலாகலம் கொண்டாடப்பட்டது.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தமிழ்ப்புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. கற்பகவிநாயகர்,மருதீசர் சன்னதி முன்பாக, விசுவாவசு ஆண்டு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.
பின்னர் வெள்ளி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் அம்பாள், மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி பிரகாரம் வலம் வந்தனர். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

