ADDED : அக் 15, 2024 09:23 PM
சென்னை:தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசு தேர்வுகள் இயக்ககம், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு, வரும் 19ம் தேதி நடக்க உள்ளது. இதில், பங்கேற்க உள்ள மாணவர்களின் பெயர் பட்டியலுடன் கூடிய வருகைத்தாள், தேர்வு மையம் வாரியாக, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது.
இதை, தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
அதேபோல, மாணவர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை, தலைமையாசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் தங்களின் யூசர் ஐ.டி., பாஸ்வேர்டை இட்டு, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு வழங்கி, தேர்வு மைய விபரங்களை தெரிவிக்க வேண்டும்.
தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில், மாணவர் பெயர், பிறந்த தேதியில் திருத்தம் இருந்தால், சிவப்பு மையால் திருத்தம் செய்து, முதல்வர் அல்லது தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.