ADDED : செப் 05, 2024 02:45 AM
* பள்ளி கல்வித்துறை பிளஸ் 1 மாணவர்களுக்கான தமிழ் திறனறி தேர்வை அக்., 19ல் நடத்த உள்ளது. இதில் பங்கேற்க www.dge.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து 50 ரூபாய் கட்டணத்துடன் தலைமை ஆசிரியர் வாயிலாக செப். 19க்குள் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வாகும், 1500 மாணவர்களுக்கு, மாதம் 1500 ரூபாய் வீதம், இரண்டு ஆண்டுகளுக்கு உதவி தொகை கிடைக்கும்.
* நாட்டில் பதிவு செய்ய தகுதியான அனைத்து டாக்டர்களும், தங்களின் எம்.பி.பி.எஸ்., பட்ட சான்றிதழின் டிஜிட்டல் நகல், மாநில மருத்துவ கவுன்சில், இந்திய மருத்துவ கவுன்சில் சான்றிதழ்கள் உள்ளிட்ட விபரங்களை, தேசிய மருத்துவ சட்டப்படி, தேசிய மருத்துவ பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என, தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
* மத்திய தொல்லியல் துறையின் கண்காணிப்பாளரான அமர்நாத் ராமகிருஷ்ணன், தொல்லியல் துறையின் இயக்குனராக பதவி உயர்த்தப்பட்டு, டில்லி தலைமை அலுவலகத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர், கீழடி அகழாய்வு, தென்னிந்திய ஆலய பாதுகாப்பு பிரிவு உள்ளிட்டவற்றின் கண்காணிப்பாளராக செயல்பட்டவர்.
* சிறப்பு பிரிவினருக்கான இளநிலை கால்நடை மருத்துவ கலந்தாய்வு நேற்று நடந்தது. அதில், 25 இடங்கள் மட்டுமே நிரம்பின. மீதமுள்ள 26 இடங்களை, பொது கலந்தாய்வில் சேர்த்து, கால்நடை மருத்துவ மாணவர் சேர்க்கை குழு உத்தரவிட்டது.