ADDED : அக் 24, 2024 02:42 AM
திருச்சி:சென்னையில் தமிழக கவர்னர் ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது, சில வரிகள் விடுபட்டது. இது தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவிக்கையில், 'தமிழ்த்தாய் வாழ்த்தில் இரண்டு வரிகள் விடுபட்டதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா, நான் ஆட்சிக்கு வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது' என்று கூறினார். இதற்கும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், திருச்சி மாவட்ட எஸ்.பி., வருண்குமாரிடம், மணப்பாறை அரசு வக்கீல் முரளிதரன் என்பவர் அளித்த புகாரில், தமிழ்த்தாய் வாழ்த்தை அவமரியாதை செய்யும் வகையில் சீமான் பேசியுள்ளார்.
இது மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. ஆகையால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' கூறியுள்ளார்.
புகாரை பெற்றுக் கொண்ட எஸ்.பி., வருண்குமார், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே சீமானுக்கும், எஸ்.பி., வருண்குமாருக்கும் நேரடி பிரச்னை உள்ள நிலையில், தற்போது, சீமான் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது சிக்கலை ஏற்படுத்துமா என்று எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

