மீண்டும் பா.ஜ.,வில் இணைந்தார் தமிழிசை சவுந்தரராஜன்
மீண்டும் பா.ஜ.,வில் இணைந்தார் தமிழிசை சவுந்தரராஜன்
UPDATED : மார் 20, 2024 12:48 PM
ADDED : மார் 20, 2024 12:11 PM

சென்னை: கவர்னர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், மீண்டும் இன்று (மார்ச் 20) தமிழிசை சவுந்தரராஜன் பா.ஜ.,வில் இணைந்தார். லோக்சபா தேர்தலில் தமிழிசை போட்டியிட உள்ளார்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், துாத்துக்குடி தொகுதியில் தி.மு.க.,வின் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டு தமிழிசை தோல்வி அடைந்தார். 2019ம் ஆண்டு செப்டம்பரில் தெலுங்கானா மாநில கவர்னர் நியமிக்கப்பட்ட போது, பா.ஜ.,வில் இருந்து தமிழிசை விலகினார். தொடர்ந்து, 2021 பிப்ரவரியில் புதுச்சேரி துணைநிலை கவர்னர் பதவி கூடுதல் பொறுப்பாக அவருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் கவர்னர் தமிழிசை தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார்.
இன்று(மார்ச் 20) அவர் நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜ.,வில் இணைந்தார். அவருக்கு பா.ஜ., உறுப்பினர் அட்டையை அண்ணாமலை வழங்கினார். லோக்சபா தேர்தலில் தமிழிசை போட்டியிட உள்ளார்.
பா.ஜ.,வில் இணைந்த பின் தமிழிசை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கவர்னர் பதவியை விட பா.ஜ.,வின் உறுப்பினர் என்ற பதவியே எனக்கு மிகப்பெரியது. கஷ்டமான முடிவை எடுத்திருந்தாலும் அதை இஷ்டப்பட்டு எடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

