ADDED : மார் 27, 2025 12:22 AM
நாமக்கல்:''டெண்டர் விதிகளை தளர்த்த வலியுறுத்தி, தென்மண்டல பல்க் எல்.பி.ஜி., டேங்கர் லாரிகள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன,'' என, சதர்ன் ரீஜன் பல்க் எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரராஜன் கூறினார்.
இதுகுறித்து நாமக்கல்லில் அவர் கூறியதாவது:
பொதுத்துறை ஆயில் நிறுவனங்களுக்கு டெண்டர் முறையில், எல்.பி.ஜி., லாரிகளை இயக்கி வரும் லாரி உரிமையாளர்களுக்கு, புதிய ஒப்பந்தத்தை அந்த ஆயில் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதில், 21 டன் கொண்ட, மூன்று அச்சு லாரிகளுக்கு முன்னுரிமை, கிளீனர் இல்லையென்றால் அபராதம் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிகளை தளர்த்த ஆயில் நிறுவனங்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதுவரை பொதுத்துறை ஆயில் நிறுவனங்கள் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இதனால் வேறு வழியின்றி நாளை காலை, 6:00 மணி முதல் போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.