மின் கட்டண உயர்வில் விலக்கு 'டான்ஸ்டியா' வலியுறுத்தல்
மின் கட்டண உயர்வில் விலக்கு 'டான்ஸ்டியா' வலியுறுத்தல்
ADDED : ஜூலை 05, 2025 06:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'தாழ்வழுத்த பிரிவில், 112 கிலோ வாட் வரை உள்ள, மின் நுகர்வோருக்கும், மின் கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, 'டான்ஸ்டியா' எனப்படும், தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் தலைவர் மோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
தாழ்வழுத்த பிரிவில், 50 கிலோ வாட் வரை, கட்டண உயர்வில் இருந்து விலக்கு தரப்பட்டுள்ளது. பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும், சிறு, குறுந்தொழில்கள், கடந்த மூன்று ஆண்டுகளாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால், மிகவும் சிரமமான நிலையில் உள்ளன.
எனவே, 112 கிலோ வாட் வரை உள்ள தாழ்வழுத்த மின் நுகர்வோருக்கும் மானியம் வழங்கி, மின் கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.