டாஸ்மாக் ஊழியர்கள் இப்போ ஹேப்பி! தீபாவளி போனசை அறிவித்த தமிழக அரசு
டாஸ்மாக் ஊழியர்கள் இப்போ ஹேப்பி! தீபாவளி போனசை அறிவித்த தமிழக அரசு
ADDED : அக் 21, 2024 02:46 PM

சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனசை தமிழக அரசு அறிவித்துள்ளது.
வரும் (அக்.) 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்னும் 10 நாட்களே தீபாவளிக்கு உள்ள நிலையில், பண்டிகையை கொண்டாட அனைவரும் தயாராகி வருகின்றனர். புத்தாடைகள், அலங்காரம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை மக்கள் வாங்கி வருவதால் கடைவீதிகளில் எப்போதும் கூட்டம் காணப்படுகிறது.
இந் நிலையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனசை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, குரூப் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், துணை விற்பனையாளர்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும்.
தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து, டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிகபட்ச போனசாக ரூ.16,800 வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

