ADDED : ஆக 06, 2025 01:46 AM

சென்னை:'டாஸ்மாக்' ஊழியர் மாநில சம்மேளனத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழும்பூரில், உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
சம்மேளன நிர்வாகிகள் கூறியதாவது:
தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடைகளில், 22 ஆண்டுகளாக பணியாளர்கள் தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர். அனைத்து பணியாளர்களையும், பாகுபாடு இல்லாமல், பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
கேரளாவை போல ஒவ்வொரு கடையிலும், விற்பனை கவுன்டர், பணம் வாங்கும் கவுன்டர் ஏற்படுத்தி, விற்பனையை முறைப்படுத்த வேண்டும். எட்டு மணி நேரத்துக்கு மேலான வேலை நேரத்திற்கு, மிகை நேர ஊதியம் வழங்க வேண்டும். சம்பளத்துடன் வார விடுமுறை அளிக்க வேண்டும்.
மதுக்கடை ஊழியர்களுக்கும் ஓய்வூதிய வயதை, 60 ஆக உயர்த்த வேண்டும். பணியின் போது மரணம் அடையும் ஊழியரின் வா ரிசுக்கு வேலை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போரா ட்டம் நடத்துகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
உண்ணாவிரத போராட்டத்தில், 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.