ADDED : ஜூலை 04, 2025 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவன மதுக் கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர்களுக்கு, கடந்த ஏப்ரல் முதல் தலா, 2,000 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
இதில், 1,000 ரூபாயை ஊதிய உயர்வாகவும், மற்றொரு 1,000 ரூபாயை ஊக்கத்தொகையாகவும் வழங்க அரசு முடிவு செய்தது. இதற்கு பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், டாஸ்மாக் பணியாளர் சங்க பொதுச்செயலர் தனசேகரன் கூறுகையில், ''தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சில், 10 நாட்களில் 2,000 ரூபாய் ஊதிய உயர்வு வழங்குவதாக உறுதி அளித்தனர்,'' என்றார்.