ADDED : மே 23, 2025 04:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை:
தமிழக அரசு நடத்தும், 'டாஸ்மாக்' நிறுவனத்தின் ஒரே நோக்கம், மக்கள் மதுபோதையில் இருப்பதை உறுதி செய்வதுடன், தி.மு.க.,வினர் லாபம் ஈட்டுவதை உறுதி செய்வதுதான். சட்ட விரோத மதுக்கூடங்கள், மது விற்பனை கடையில் இருந்து, கணக்கில் வராத பணம், தி.மு.க., அமைச்சர்களின் கஜானாவில் சேருகின்றன.
மதுக்கூட உரிமையாளர் ஒருவர், டாஸ்மாக்கில் உள்ள ஒவ்வொரு அதிகாரியாலும் கொடுமைப்படுத்தப்பட்டு, அழுத்தத்தை தாங்க முடியாமல், தன் உயிரை மாய்த்துக்கொள்ளப் போவதாக வீடியோ வெளியிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின், ஏழைகளிடம் கொள்ளை அடிப்பதை நிறுத்திவிட்டு, மாநில முதல்வராக செயல்படும் முன், தி.மு.க., அரசு இன்னும் எத்தனை உயிர்களை பலிகொடுக்கப் போகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.