sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இதெல்லாம் ரொம்ப தவறுங்க: இ.பி.எஸ்., சொல்கிறார் அரசுக்கு அறிவுரை

/

இதெல்லாம் ரொம்ப தவறுங்க: இ.பி.எஸ்., சொல்கிறார் அரசுக்கு அறிவுரை

இதெல்லாம் ரொம்ப தவறுங்க: இ.பி.எஸ்., சொல்கிறார் அரசுக்கு அறிவுரை

இதெல்லாம் ரொம்ப தவறுங்க: இ.பி.எஸ்., சொல்கிறார் அரசுக்கு அறிவுரை

2


ADDED : ஆக 14, 2024 12:23 PM

Google News

ADDED : ஆக 14, 2024 12:23 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நின்றால் வரி , நடந்தால் வரி, பேசினால் வரி, தண்ணீர் குடித்தால் வரி என அனைத்திற்கும் மக்கள் மீது வரி சுமத்துக்கின்றனர் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டியுள்ளார்.

எதற்கெடுத்தாலும் வரியா?

அவரது அறிக்கை: பள்ளி பாடப் புத்தகங்களின் விலையை உயர்த்திய தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். தனியார் பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களின் விலை சுமார் 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. நின்றால் வரி , நடந்தால் வரி, பேசினால் வரி, தண்ணீர் குடித்தால் வரி என அனைத்திற்கும் மக்கள் மீது வரி சுமத்துக்கின்றனர்.

விலை உயர்வு

மக்களை கடனாளியாக்கும் வேலையை விடியா தி.மு.க., அரசின் முதல்வர் ஸ்டாலின் கன கச்சிதமாக மேற்கொண்டு வருகிறார். ஏற்கெனவே கடுமையான விலைவாசி உயர்வினாலும், பல மடங்கு அரசு கட்டணங்கள் உயர்வினாலும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக மக்களின் தினசரி வாழ்வில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல், தற்போது உயர்த்தப்பட்டுள்ள பள்ளி பாடப் புத்தகங்களின் விலை உயர்வை தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us