ADDED : ஜூன் 18, 2025 10:58 PM
சென்னை:பள்ளிக்கல்வி துறையில் ஆசிரியராக பணியாற்றுவோர், கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு பெற்றால், அடுத்தாண்டு பள்ளி திறக்கும் வரை அவர்கள் பணியாற்றும் வகையில் பணி நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது.
தற்போது அது மாற்றப்பட்டு, கல்வியாண்டு முடியும் வரை மட்டுமே பணி நீட்டிப்பு வழங்கப்படும் என திருத்தப்பட்டுள்ளது. புதிய முறையை கைவிட்டு, பழைய முறையையே பின்பற்ற வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து, பட்டதாரி ஆசிரியர் கூட்டணி மாநில செயலர் செல்லய்யா கூறியதாவது:
பள்ளிக்கல்வி துறையில் ஓய்வு பெறுவோருக்கு இதுவரை, மே 31 வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. தற்போது அது, ஏப்., 30 வரை என மாற்றப்பட்டுள்ளது.
இதனால், விடைத்தாள் திருத்தும் பணி, புதிய மாணவர்கள் சேர்ப்பது உள்ளிட்ட கல்விப் பணிகளில் இருந்து அவர்கள் விலக்கப்பட்டுள்னர். இதனால், ஒரு மாத ஊதியத்தையும் இழக்கின்றனர். அதனால், பழைய முறையையே பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.