ADDED : ஆக 05, 2025 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:கள்ளர் சீரமைப்பு துறை பள்ளிகளுக்கு தேர்வான ஆசிரியர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்குமாறு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, சங்க மாநில துணை தலைவர் விஜய் கூறுகையில், ''2025ம் ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர் நியமன தேர்வில் வெற்றி பெற்ற, 2,342 பேர் பணியில் சேர்ந்துள்ளனர்.
கள்ளர் சீரமைப்பு துறை பள்ளிகளுக்கு தேர்வான, 18 ஆசிரியர்களுக்கு மட்டும் நியமன ஆணை வழங்கப்படவில்லை.
கள்ளர் பள்ளி இணை இயக்குநரகத்தை தொடர்பு கொண்டால், முறையாக பதிலளிப்பதில்லை. முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

