தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/புதிய பாடத்திட்டம் தொடர்பாக ஆசிரியர்களுக்கு சக ஆசிரியர்களே பயிற்சி அளிப்பதால் அதிருப்தி

புதிய பாடத்திட்டம் தொடர்பாக ஆசிரியர்களுக்கு சக ஆசிரியர்களே பயிற்சி அளிப்பதால் அதிருப்தி

புதிய பாடத்திட்டம் தொடர்பாக ஆசிரியர்களுக்கு சக ஆசிரியர்களே பயிற்சி அளிப்பதால் அதிருப்தி


UPDATED : அக் 19, 2026 06:38 PM

ADDED : அக் 19, 2026 06:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2026 06:38 PM ADDED : அக் 19, 2026 06:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: புதிய பாடத்திட்டம் தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் பணியில், சக ஆசிரியர் களே ஈடுபடுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழகத்தில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, இரண்டாம் பருவ வகுப்புகள் தொடங்கி உள்ளன.

இதற்காக, ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, கடந்த, 15, 16ம் தேதிகளில் வட்டார அளவில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

பொதுவாக, புதிய பாடத்திட்டங்கள் தொடர்பாகவும், கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்தவும், பயிற்றுனர்கள் வாயிலாக பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுவது வழக்கம்.

ஆனால், சமீப காலமாக, ஆசிரியர்களை வைத்தே ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் நடைமுறை, பள்ளிக்கல்வி துறையில் பின்பற்றப்பட்டு வருகிறது.

அதேபோல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், இரண்டாம் பருவத்துக்கான பயிற்சிகளை, ஆசிரியர்களே வழங்கி உள்ளனர். ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்க, ஆசிரியர்களையே பயன்படுத்துவதால், கற்பித்தல் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாக, புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, ஆசிரியர் வட்டாரங்கள் கூறியதாவது:

பயிற்றுனர்களே, ஆசிரியர்களுக்கு கற்பித்தல் செயல்பாடுகள் குறித்து பயிற்சி வழங்கினர். இதுவே, அவர்களின் முதன்மை பணி. ஆனால், தற்போது, ஆசிரியர்களே ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் முறை பின்பற்றப்படுகிறது.

மாநில பயிற்சி, மாவட்ட பயிற்சிக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் வழியாக வட்டார அளவில் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதனால், பள்ளிகளில் கற்பித்தல் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us