ADDED : ஜன 31, 2026 06:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் நிறுவனத் தலைவர் மாயவன் அறிக்கை:
பழைய ஓய்வூதிய திட்டத்தை, தமிழக அரசு முழுமையாக அமல் படுத்தவில்லை. ஆனால், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை, தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாதந்தோறும் 10 சதவீதம் ஊதிய பிடித்தம் செய்து, அதன் அடிப்படையில், ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற திட்டத்தை, ஒருபோதும் ஏற்க முடியாது.
இந்த சூழலில், ஜாக்டோ-ஜியோ சார்பில், வரும் பிப்., 8ம் தேதி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு நடத்துவது வேதனையாக உள்ளது.
இந்த மாநாட்டில், சங்க உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டாம்; எந்த நிதியும் வழங்க வேண்டாம். இவ்வாறு கூறியுள்ளார்.

