ADDED : பிப் 16, 2024 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக அரசின், 'டெடா' எனப்படும், எரிசக்தி மேம்பாட்டு முகமை, மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்கும் பயனாளிகளுக்கு, மத்திய அரசின் மானியத்தை பெற்று தருகிறது. மேலும், அரசு துறை கட்டடங்களில் ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக, மேற்கூரை சூரியசக்தி மின் நிலையமும் அமைக்கிறது.
சூரியசக்தி, காற்றாலை மின் திட்டங்களுக்கு அரசு சார்பில் அளிக்கப்படும் சலுகை உள்ளிட்ட விபரங்கள், 'டெடா' நிறுவனத்தின் இணையதளத்தில் இடம் பெற்றிருந்தன. சில தினங்களாக, டெடா இணையதளம் முடங்கியுள்ளது.