ADDED : டிச 06, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: முதல்வர் ஸ்டாலினை, தலைமைச் செயலகத்தில், தெலுங்கானா மாநில நீர்வளத்துறை அமைச்சர் சந்தித்து பேசினார்.
தெலுங்கானா மாநில நீர்வளத்துறை அமைச்சராக உள்ளவர் உத்தம் குமார் ரெட்டி. நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
தெலுங்கானாவில் விரைவில் நடக்க உள்ள அரசு விழாவில் பங்கேற்க, அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி சார்பில் அழைப்பு விடுத்ததாக, தகவல் வெளியாகி உள்ளது.
சந்திப்பு தொடர்பாக, அரசு தரப்பில் புகைப்படம் மட்டும் வெளியிடப்பட்டது.

