தேர்வு எழுதுவது குறித்து பிரதமரிடம் ஆலோசிக்கலாம்
தேர்வு எழுதுவது குறித்து பிரதமரிடம் ஆலோசிக்கலாம்
ADDED : டிச 06, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தேர்வெழுதுவது குறித்த ஆலோசனைகளை, பிரதமர் மோடியிடம் இருந்து பெறும் வகையிலான, 'பரிக் ஷா பே சர்ச்சா' நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவர்கள், வரும் ஜன., 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பதற்றம், பயம், மன அழுத்தம் உள்ளிட்ட மனநிலைகளில் இருந்து விடுபட்டு, சிறப்பாக தேர்வெழுதும் வகையில், பிரதமர் மோடி, கடந்த எட்டு ஆண்டுகளாக, 'பரிக் ஷா பே சர்ச்சா' என்ற நிகழ்ச்சி வாயிலாக உரையாடி, ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.
இதில் பங்கேற்க ஆர்வமுள்ளோர், வரும் ஜன., 11ம் தேதிக்குள், 'https://innovateindia.mygov.in' என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ - மாணவியர், அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள், தங்களின் கேள்விகளை அனுப்பலாம்.

