ADDED : மார் 06, 2024 08:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:தலைநகர் டில்லியில் நேற்று, இயல்பை விட 4 டிகிரி குறைவாக, 9 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையுடன் இதமான சூழ்நிலை நிலவியது.
இம்மாதத்தின் முதல் வாரத்தில் மூன்று நாட்களாக குறைந்தபட்ச வெப்ப நிலை தொடர்ந்து, 9 டிகிரி செல்ஷியஸாகவே நீடிக்கிறது.
பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 9:00 மணிக்கு காற்றில் ஈரப்பதம் 72 சதவீதமாகவும், காற்றின் தரக் குறியீடு, 120 ஆகவும் இருந்தது. இது மிதமான நிலை என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

