உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மார் 09, 2026 06:34 AM

அ நிறம் | அளவு
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை:
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில், நீலகிரி மற்றும் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில், இன்று லேசான மழை பெய்யலாம்.
தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், நாளை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மாநிலத் தின் பிற பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் நான்கு நாட்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; சில இடங்களில் லேசான மழை பெய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
