தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ வெயில் இன்று 3 டிகிரி அதிகரிக்கும்

வெயில் இன்று 3 டிகிரி அதிகரிக்கும்

வெயில் இன்று 3 டிகிரி அதிகரிக்கும்


ADDED : ஜூன் 19, 2025 12:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2025 12:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை,:தமிழகம், புதுச்சேரியில் இன்று வெப்பநிலை, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகம் பதிவாக வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தமிழகத்தில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில், 8 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், 7; கோவை மாவட்டம் சோலையார், வால்பாறை ஆகிய இடங்களில் தலா, 6 செ.மீ., மழை பெய்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 24 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், ஒரு சில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகக் கூடும். இதனால், அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகரிப்பால், வெளியில் செல்வோருக்கு அசவுகரியம் ஏற்பட வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்ப நிலை, 38 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us