சம்பளம் பாக்கி வாங்கித்தர ரூ.1 லட்சம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் கோவில் செயல் அலுவலர்
சம்பளம் பாக்கி வாங்கித்தர ரூ.1 லட்சம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் கோவில் செயல் அலுவலர்
UPDATED : ஏப் 03, 2025 06:19 PM
ADDED : ஏப் 03, 2025 03:08 PM

திருவாரூர்: திருவாரூரில் பொங்கு சனீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ஜோதி, அதே கோவிலில் கிளர்க் ஆக பணிபுரியும் சசி குமாரிடம் ரூ.1 லட்சம் வாங்கிய போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோவிலில் செயல் அலுவலராக ஜோதி, 42, பணிபுரிந்து வருகிறார். இதே கோவிலில் கிளர்க் ஆக சசிகுமார், 49, என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு துறையில் இருந்து வரவேண்டிய ரூ.2 லட்சம் சம்பளம் நிலுவையில் இருந்துள்ளது.
இவர் சம்பளம் பாக்கியை பெற்று தரும்படி, செயல் அலுவலர் ஜோதியை நாடியுள்ளார். அவர் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் சம்பளம் பாக்கி ரூபாய் சசி குமாருக்கு வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று( ஏப்ரல் 03) மன்னார்குடியில் உள்ள ஆதி விநாயகர் கோவிலில், ஜோதி ஆய்வு மேற்கொண்டு இருக்கும்போது, சசிகுமார் ரூ.1 லட்சம் லஞ்சம் பணத்தை கொடுத்துள்ளார்.
அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., நந்தகோபால் தலைமையிலான போலீசார் ஜோதியை கையும், களவுமாக கைது செய்தனர். இவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.