sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வணிக வளாகம் கட்ட கோயில் நிதியை பயன்படுத்த முடியாது

/

வணிக வளாகம் கட்ட கோயில் நிதியை பயன்படுத்த முடியாது

வணிக வளாகம் கட்ட கோயில் நிதியை பயன்படுத்த முடியாது

வணிக வளாகம் கட்ட கோயில் நிதியை பயன்படுத்த முடியாது


ADDED : ஜன 11, 2025 02:09 AM

Google News

ADDED : ஜன 11, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'ஹிந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளை மீறி வணிக வளாகம் கட்ட கோவில் நிதியை பயன்படுத்த முடியாது' என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் நந்தீஸ்வரர் கோவில் நிலத்தில் வணிக வளாகம் கட்ட கோரப்பட்ட டெண்டர் நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த நந்திவரத்தில், ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது நந்தீஸ்வரர் கோவில். இக்கோவிலுக்கு எதிரே 16 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் 1.12 கோடி ரூபாய் மதிப்பில் 10 கடைகளுடன் கூடிய வணிக வளாகம் கட்ட 2023 டிசம்பர் 11ல் 'டெண்டர்' கோரப்பட்டது.

இந்த டெண்டர் அறிவிப்பை ரத்து செய்யவும், கட்டுமான பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கவும் கோரி பாஸ்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இரண்டு வாரம் வரை வணிக வளாகம் கட்ட இடைக்கால தடை விதித்து கடந்த செப்., 24ல் உத்தரவிட்டது. பின் அக்டோபர் 30 வரை தடையை நீட்டித்தது.

இந்த தடையை மீறி ஹிந்து அறநிலையத்துறை கட்டுமான பணிகளை மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீதிமன்ற உத்தரவை மீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பாஸ்கர் தாக்கல் செய்தார்.

அதேநேரத்தில் கட்டுமான பணிகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கக்கோரி அறநிலைய துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை ஒன்றாக விசாரித்த உயர் நீதிமன்றம் மறு உத்தரவு வரும் வரை கட்டுமான பணிகளை மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்திருந்தது.

நேற்று முன் தினம் இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் ஆஜராகி, ''அறநிலைய துறை சட்டப்பிரிவு 36, 36(1), 36(ஏ),36(பி) மற்றும் 66 (1)ன்படி வணிக வளாகம் கட்ட அனுமதி இல்லை. அன்னதான கூடம் மற்றும் தேவாரம், திவ்ய பிரபந்தம் உள்ளிட்ட ஹிந்து தர்மத்தின் மகத்துவங்களை பரப்புவதற்கு தான் கோவிலின் உபரி நிதியை பயன்படுத்த வேண்டும். மருத்துவமனை கட்டவும், ஏழை, ஹிந்து மாணவர்களுக்கு ஹிந்து தர்மத்தை, தர்ம இலக்கியங்களை கற்றுக்கொடுக்கவும், சட்டத்தில் இடம் உள்ளது. வணிக வளாகம் கட்ட சட்டத்தில் இடம் இல்லை'' என்றார்.

அறநிலைய துறை தரப்பு சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி ''கமிஷனருக்கு சட்டத்தில் இடம் உள்ளது. வருவாய் ஈட்டும் நோக்கில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது,'' என்றார்.

மனுதாரர் தரப்பில் ''அறநிலைய துறை சட்டத்தில் இதுபோல் இடம் பெறவில்லை. இது போன்ற செயல்கள் கோவில் பணத்தை வீணடிக்கும் செயல். கோவில் நிலத்தில் 'டெண்டர்' கோரப்பட்டு, வணிக வளாகம் கட்ட இடமில்லை,'' என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட முதல் பெஞ்ச் 'கோவில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்ட சட்ட விதிகள் அனுமதிக்கவில்லை. மாறாக, உபரி நிதியை வங்கியில் டிபாசிட் செய்து வருவாய் ஈட்டலாம். கட்டப்பட்ட கட்டுமானத்தை, அன்னதான கூடத்துக்கு பயன்படுத்த வேண்டும்' என உத்தரவிட்டு டெண்டர் நடவடிக்கையை ரத்து செய்தது.






      Dinamalar
      Follow us