பக்தர்கள் வரும் வரை தான் கோவில்: சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில் நீதிபதி கருத்து
பக்தர்கள் வரும் வரை தான் கோவில்: சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில் நீதிபதி கருத்து
ADDED : அக் 19, 2024 02:44 PM

சென்னை : '' பக்தர்கள் வரும் வரை தான் கோவில்,'' என சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி தண்டபாணி கூறினார்.
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் சஸ்பெண்ட் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி தண்டபாணி கூறியதாவது: சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருபவர்கள் எல்லாம் சண்டைக்கு வருவது போலவே தீட்சிதர்கள் நினைக்கிறார்கள். சிதம்பரம் நடராஜர் கோவில் நமக்கு சொந்தமானது என பொது தீட்சிதர்கள் நினைக்கின்றனர். அங்கே காசு போட்டால்தான் பூ கிடைக்கும். இல்லையென்றாறால் விபூதி கூட கிடைக்காது.
அங்கு மட்டுமே நடத்தப்பட்டு வந்த ஆருத்ரா தரிசனம் தற்போது பல கோவில்களில் நடத்தப்படுகிறது. இக்கோவிலில் ஆருத்ரா தரிசனத்திற்கு முன்பு போல் பக்தர்கள் கூட்டம் வருவதில்லை. இப்படியே இருந்தால் பக்தர்களுடைய வருகை குறைந்து கோவில் பாழாகிவிடும். பக்தர்கள் வரும் வரை தான் கோவில் எனக்குறிப்பிட்ட நீதிபதி, இந்த வழக்கில் பதிலளிக்கும்படி ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டார். விசாரணயை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.