ADDED : டிச 09, 2024 04:51 AM
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே கோவில் உண்டியலை உடைத்து நகை, பணம் திருடி சென்ற மர்ப நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீமுஷ்ணம் அடுத்த மதகளிர்மாணிக்கம் கிராமத்தில் பச்சை வாழியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அதே ஊரை சேர்ந்த ஏகாம்பரம்,74; நிர்வாகியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு, ஏகாம்பரம் கோவிலில் விளக்கு போட்டுவிட்டு பூட்டி சென்றார். நேற்று காலை 6:௦௦ மணிக்கு வந்து பார்த்தபோது கோவிலில் கிரில்கேட்டில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது உண்டியலில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த 1 சவரன் தங்க தாலி திருடு போயிருந்தது.
புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.