ADDED : நவ 17, 2025 01:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதம்:
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, டிச., 17-ம் தேதி தமிழகம் முழுதும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு, சிறை நிரப்பும் போராட்டம் நடத்த உள்ளோம். அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு, நாம் நடத்தவிருக்கும் போராட்டம் பத்தோடு பதினொன்றாக இருக்கக் கூடாது.
நம் வலிகளையும், வலிமையையும் வெளிப் படுத்தும் வகையில் வெற்றிகரமாக அமைய வேண்டும். போராட்டக் களத்தில், தொண்டர் களுடன் கைகோர்த்து போராடும் நாளை எண்ணி காத்திருக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

