தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் தமிழகத்தில் இன்று துவக்கம்

 நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் தமிழகத்தில் இன்று துவக்கம்

 நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் தமிழகத்தில் இன்று துவக்கம்


ADDED : பிப் 14, 2026 07:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 07:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'தமிழகத்தில் நிலப்பரப்பில் காணப்படும் பறவைகள் குறித்த ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு பணிகள், இன்று துவங்குகின்றன' என, வனத்துறை அறிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தமிழகத்தில், ஆண்டு தோறும், ஜன., பிப்., மாதங்களில், ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு, வனத்துறை வாயிலாக நடத்தப்படும். அந்த வகையில், 2026ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு, முன்கூட்டியே துவக்கப்பட்டது.

கடந்த டிச., 27, 28ம் தேதிகளில், நீர் நிலை பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது. இதில் திரட்டப்பட்ட தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுப்பு, இன்றும், நாளையும் நடக்க உள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு வனக்கோட்டத்திலும், 25 இடங்களில், இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.

பறவையியல் ஆர்வலர்கள், வன உயிரின ஆர்வலர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இந்த கணக்கெடுப்பில் பங்கேற்கலாம். அந்தந்த மாவட்ட வனத்துறை அலுவலகத்தை அணுகி, இதில் பதிவு செய்து கொள்ளலாம். வனத்துறை வெளியிட்டுள்ள, 'கியூ ஆர்' குறியீடை 'ஸ்கேன்' செய்தும், கணக்கெடுப்பில் பங்கேற்க பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us