தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மாற்றுத்திறனாளிகளுக்கு 'டெட்'தகுதி மதிப்பெண் 60 ஆக குறைப்பு!

மாற்றுத்திறனாளிகளுக்கு 'டெட்'தகுதி மதிப்பெண் 60 ஆக குறைப்பு!

மாற்றுத்திறனாளிகளுக்கு 'டெட்'தகுதி மதிப்பெண் 60 ஆக குறைப்பு!


ADDED : பிப் 25, 2026 10:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 10:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு எனும், 'டெட்' தேர்வுக்கான, குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்ணை, மாற்றுத்திறனாளிகளுக்கு, 75ல் இருந்து 60 ஆக குறைத்து, பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, நாடு முழுதும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற, ஆசிரியர் தகுதித் தேர்வு எனும், 'டெட்' தேர்ச்சி கட்டாயம். மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு, பொதுப் பிரிவினர், 60 சதவீதம் அதாவது 90 மதிப்பெண்; மற்ற பிரிவினர் 55 சதவீதம் அதாவது 82.5 மதிப்பெண் பெற வேண்டும்.

இதற்கிடையில், 'டெட்' குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை குறைத்து, பள்ளிக்கல்வித்துறை கடந்த ஜன., 28ல் அரசாணை வெளியிட்டது. அந்த வகையில், பொதுப்பிரிவினருக்கு 60 சதவீதம் அதாவது 90 மதிப்பெண்; பி.சி., - பி.சி.எம்., - எம்.பி.சி., மாற்றுத்திறனாளிகளுக்கு, 50 சதவீதம் அதாவது 75 மதிப்பெண்; எஸ்.சி., - எஸ்.சி.ஏ.,- எஸ்.டி., பிரிவினருக்கு, 40 சதவீதம் அதாவது 60 மதிப்பெண் குறைந்தபட்ச தகுதி, மதிப்பெண்ணாக நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த சூழலில், மாற்றுத்திறனாளிகள், தங்களுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக, தமிழக மாற்றுத்திறனாளிகள் நல கமிஷனர், அரசுக்கு பரிந்துரை செய்தார்.

அதை ஏற்றுக் கொண்ட அரசு, மாற்றுத்திறனாளிகளுக்கான 'டெட்' தேர்ச்சி குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை, 40 சதவீதமாக, அதாவது 60 மதிப்பெண்ணாக நிர்ணயம் செய்து, அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கான அரசாணையை, பள்ளிக்கல்வித்துறை செயலர் சந்திரமோகன் பிறப்பித்துள்ளார்.

இந்த புதிய அரசாணை, கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் நடந்த, 'டெட்' தேர்வு; வரும் ஜூலை 4, 5ம் தேதிகளில் நடக்கும், 'டெட்' தேர்வுகளுக்கு பொருந்தும் என, பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us