தை அமாவாசை; முன்னோருக்கு தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு: புகைப்பட ஆல்பம் இதோ!
தை அமாவாசை; முன்னோருக்கு தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு: புகைப்பட ஆல்பம் இதோ!
UPDATED : ஜன 29, 2025 12:41 PM
ADDED : ஜன 29, 2025 09:19 AM

சென்னை: தை அமாவாசையை முன்னிட்டு, ராமநாதபுரம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.
தை அமாவாசையை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர். அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகம் முழுவதும், தை அமாவாசையை முன்னிட்டு ஏராமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

* மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் காவேரி சங்கமத் துறையில் ஏராளமானோர் புனித நீராடினர். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அரிசி, காய்கறிகள், தானியங்களை தானமாக கொடுத்து வழிபாடு நடத்தினர்.
* திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் திரண்ட பக்தர்கள் முக்குளத்தில் நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.

* நாமக்கல் மாவட்டம், மோகனூர் காவிரி ஆற்றில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு நடத்தினர்.

* கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் செய்து பக்தர்கள் கடலில் நீராடினர்.

* சிவகங்கை தெப்பக்குளத்தில் முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
![]()  | 
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றின் புஷ்யமண்டப படித்துறையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, நீராடி வழிப்பட்டனர்.
![]()  | 
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள குறிச்சி காசி விஸ்வநாதர் கோவிலில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
![]()  | 




