தேயிலை தொழில் முனைவோருக்கு கடன் 'தாய்கோ' வங்கி முடிவு
தேயிலை தொழில் முனைவோருக்கு கடன் 'தாய்கோ' வங்கி முடிவு
ADDED : ஜூன் 22, 2025 01:09 AM
சென்னை:தமிழக அரசின், 'தாய்கோ' எனப்படும் தமிழக தொழிற்கூட்டுறவு வங்கி, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குகிறது. புதிய பிரிவுகளில் தொழில் முனைவோரை ஊக்குவிக்க, தற்போது கடன் வழங்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டில், தமிழக அரசின் கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ், 2,055 பயனாளிகளுக்கு, 40 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு, தாய்கோ வங்கி கடன் வழங்குகிறது.
தற்போது, விவசாயிகளிடம் இருந்து தேயிலையை வாங்கி ஆலைகளுக்கு வழங்கும் குறுந்தொழில் முனைவோருக்கு, குறைந்த வட்டியில் கடன் வழங்க முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயனாளியின் தேவைக்கு ஏற்ப கடன் வழங்கப்பட உள்ளது.
தாய்கோ வங்கி கடந்த 2024 - 25ல், 2,186 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, 120 கோடி ரூபாய் கடன் வழங்கிஉள்ளது.